ஹசரங்க அதிரடி..! அவுஸ்திரேலியா அணிக்கு இமாலய இலக்கு!

#SriLanka #Srilanka Cricket #Australia #Lanka4
Shana
4 years ago
ஹசரங்க அதிரடி..! அவுஸ்திரேலியா அணிக்கு இமாலய இலக்கு!

இலங்கை அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அவஸ்திரேலியா அணிக்கு 301 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 300 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிரடி துடுப்பாட்டத்தில் ஈடுபட்ட குசல் மெந்திஸ் ஆட்டமிழக்காது 86 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தனுஸ்க குணதிலக 55 ஓட்டங்களையும் பெத்தும் நிஸ்ஸங்க 56 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இறுதியாக களமிறங்கிய வனிந்து ஹசரங்க அதிரடியாக துடுப்பெடுத்தாடி 19 பந்துகளில் 37 ஓட்டங்களை குவித்தார்.

பந்து வீச்சில் Marnus Labuschagne மற்றும் Ashton Agar ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4