கணவரை கொலை செய்வது எப்படி?புத்தகம் எழுதிய ஆயுள் தண்டனை கைதி
அமெரிக்காவில் பெண் எழுத்தாளர் நான்சி கிராம்ப்டன் ‘கணவரை கொலை செய்வது எப்படி?’ என்ற கட்டுரையின் மூலம் பிரபலமானார். இவருக்கு 21 வயது. இவருக்கு தனது கணவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்சியின் சஸ்பென்ஸ் படைப்புகளில் தி ராங் ஹஸ்பண்ட் மற்றும் தி ராங் லவ்வர் போன்ற நாவல்களும் அடங்கும். பல நாவல்களை எழுதியுள்ள நான்சி கிராம்ப்டனின் கணவருமான சமையல் கலை நிபுனருமான டானியல் கிரெய்க், கடந்த 2008ம் ஆண்டு அவர் சமையல் வகுப்புகள் நடத்தி வந்த நிறுவனத்தில் கிரெய்க் சுட்டு கொலை செய்யப்பட்டார்.
அவரது பெயரில் இருந்த 9 கோடி இன்சூரன்ஸ் பணம் மற்றும் இரண்டேகால் கோடி பணமும் நான்சி வசம் சென்றது. கொலை நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு அப்பகுதியில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது அங்கு நான்சி இருந்தது தெரியவந்தது. மேலும் இன்சூரன்ஸ் பணத்துக்காக அவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.



