அரச வைத்தியசாலைகளுக்கு ஏற்பட்ட நிலை: தனியார் மருந்தகங்களை நாடும் கதி
Mayoorikka
2 years ago

அரச வைத்தியசாலைகளுக்கும், தற்போது தனியார் மருந்தகங்களில் இருந்து மருந்துகளை கொள்வனவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.
அவசர விபத்து ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவருக்கு சாதாரண சேலைனை வழங்குவதற்கு வெளித் தரப்பினரை நாடவேண்டிய நிலை உள்ளது.
நகர மற்றும் கிராமம் என்ற வித்தியாசமின்றி, அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்த நிலை உள்ளது.
பெருமளவான கிராமப்புற வைத்தியசாலைகளில் சாதாரண சேலைன்களின் கையிருப்பு முடிவடைந்துள்ளதாக அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் பொருளாளர் மஞ்சுள ஜயவர்த்தன எமது செய்தி சேவைக்கு தெரிவித்தார்.



