அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

Prathees
2 years ago
அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கான நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி கோரிக்கை

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அந்நிய செலாவணியை விரைவாக ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கைத்தொழில் துறையில் விரிவுபடுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகால விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் முதலீட்டிற்கு கடுமையான தடையாக உள்ளன.

முதலீட்டை ஊக்குவிப்பதற்காக புதிய உத்திகளை கையாண்டு கைத்தொழில் துறையை மேம்படுத்துவதற்கு பாரியளவு பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக ஜனாதிபதி ராஜபக்ஷ தெரிவித்தார்.

கைத்தொழில் அமைச்சின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்வதற்காக இன்று (16) முற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

அந்நிய செலாவணியை ஈட்டக்கூடிய தொழில்களை இனங்கண்டு அவற்றின் அபிவிருத்திக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய எதிர்கால நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 அந்நியச் செலாவணி நெருக்கடியை எதிர்கொள்ளும் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் தீர்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஏற்றுமதி துறை மூலம் கிடைக்கும் அந்நிய செலாவணியை மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு நேரடியாக பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!