தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் மிக நீண்ட வரிசைகள்

Kanimoli
2 years ago
தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் மிக நீண்ட வரிசைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுபாடு காரணமாக வெளிநாடுகளில் இருந்து எரிபொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் எமது நாட்டில் அரசாங்கம் காணப்படுகின்றது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்தும் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் மிக நீண்ட வரிசைகள் காணப்படுகின்றன.

எரிபொருள் இன்மையால் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன், மட்டுப்படுத்தப்பட்ட வகையில் பல நிபந்தனைகளுக்கு மத்தியிலும் எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இதனால் மட்டுப்படுத்தப்பட்ட வகைகளிலே அரச மற்றும் தனியார் துறை பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு போக்குவரத்து பிரச்சினை காரணமாக மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

பலர் பாதுகாப்பற்ற வகைகளில் உயிருக்கு ஆபத்தான நிலைகளிலும் பயணம் செய்கின்றனர். இவ்வாறு மக்கள் எரிபொருளுக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்களில் பல உயிரிழப்புக்களும் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றது.

பாணந்துறை வேகட பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் வரிசையில் இருந்த தந்தையொருவர் நேற்று உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் எரிபொருள் விநியோகத்திலும் பல்வேறு ஊழல் மற்றும் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே மக்கள் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையினை உணர்ந்து, அதற்கேற்றவாறு தமது அன்றாட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியது கட்டாயமாகும்.     

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!