நுரைச்சோலை அனல் மின் நிலையம் இன்று முதல் திருத்த வேலைக்காக மூடப்பட உள்ளது

Kanimoli
2 years ago
நுரைச்சோலை அனல் மின் நிலையம்  இன்று முதல் திருத்த வேலைக்காக மூடப்பட உள்ளது

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் ஒரு பகுதி இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் திருத்த வேலைக்காக மூடப்பட உள்ளது.

இரண்டரை மாதங்களுக்கு இதனை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் பொறியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனால் பிரதான மின் கட்டமைப்பு கிடைக்க வேண்டிய இடங்களில் பாதிப்பு ஏற்படும் என்றும் 300 மெகாவாட் மின்சாரம் இல்லாமல் போகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாட்டின் பொருளாதார நெருக்கடியால் மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு பகுதி மூடப்படுவதால் தற்போது மின்வெட்டு நேரம் அதிகரிக்கும் சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் பொறியலாளர் சங்கத்தின் செயலாளர் கூறுகையில் "நுரைச்சோலை மின்நிலையத்தில் இரண்டாவது மின் உற்பத்தி இயந்திரத்தில் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்திருக்க வேண்டியதை செய்ய முடியாமல் போனதன் காரணமாகவே கட்டாயமாக இப்போது செய்ய வேண்டியுள்ளது.

இதனால் 300 மெகாவாட் மின்சாரம் இல்லாமல் போகும் இது மொத்த மின்சார அளவில் 15 விதமாகும். இதனால் தற்போதைய நிலைமையில் மின்வெட்டு நேர அளவு அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!