வைத்தியர் ஷாபி நிரபராதி என நீதிமன்றம் அறிவிக்கவில்லை- மொஹமட் முஸம்மில்

Prasu
2 years ago
வைத்தியர் ஷாபி நிரபராதி என நீதிமன்றம் அறிவிக்கவில்லை- மொஹமட் முஸம்மில்

வைத்தியர் ஷாபி நிரபராதி என நீதிமன்றம் அறிவிக்கவில்லை என ஐக்கிய தேசிய முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் குறிப்பிட்டார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அவர்,

வைத்தியர் ஷாபி நிரபராதி என நீதிமன்றம் அறிவிக்கவில்லை. அவருக்கு எதிராக விசாரணைகள் இன்னும் நிறைவடையவும் இல்லை என குறிப்பிட்டார்.

சரி என்றால் ஷாபியை பணி நீக்கம் செய்திருக்கவேண்டும். அப்படி செய்யாமல் அவரை கட்டாய விடுமுறையில் அனுப்பினார்கள்.அவர் மேன்முறையீட்டு நீதிமன்றம் சென்றார்.

அங்கு பணி நீக்கம் செய்திருந்தால் சம்பளம் வழங்க தேவையில்லை என்பதே சட்டம் ஆனால் இவரை கட்டாய விடுமுறையில் அனுப்பியதால் சம்பளம்  வழங்க வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

அவருக்கு எதிரான எந்தவொரு குற்றச்சாட்டுகளில் இருந்தும் அவரை நீதிமன்றம் நிரபராதி என அறிவிக்கவில்லை.அப்படி அறிவித்திருந்தால் எமக்கு காண்பிக்கவும் என முஸம்மில் குறிப்பிடார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!