நவாலி தேவாலய விமானத் தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்!

#SriLanka #Lanka4 #Church #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
நவாலி தேவாலய விமானத் தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல்!

யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான கொடூர விமானத் தாக்குதலின் 31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று மாலை தேவாலயத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.

சென். பீற்றர்ஸ் தேவாலயப் பங்குத்தந்தை தலைமையில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி, சுடரேற்றி கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார்கள்.

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, வலிகாமம் பகுதிகளை நோக்கி இராணுவத்தினர் மேற்கொண்ட 'முன்னேறிப்பாய்தல்' (Leap Forward) இராணுவ நடவடிக்கை காரணமாகப் பொதுமக்கள் நவாலியை நோக்கி இடம்பெயர்ந்தனர்.

அவ்வாறு இடம்பெயர்ந்து நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயத்திலும், நவாலி ஸ்ரீ கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது விமானப்படையின் மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை வீசித் தாக்கின.

இந்த அகோரக் குண்டுவீச்சில் குழந்தைகள், பெண்கள் உட்பட 147 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 350க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4