இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்த பொறியாளர்-வைரலாகும் புகைப்படம்

Prasu
4 years ago
இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்த பொறியாளர்-வைரலாகும் புகைப்படம்

உலகம் முழுவதும் உள்ள மக்களால் 2 தசாப்தத்திற்கும் மேலாக பிரவுசிங் செய்ய இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1995 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட முக்கிய மென்பொருளான இது நேற்று முன்தினம் முதல் நிறுத்தப்பட்டு விடைபெற்றது.

இந்த நிலையில் தென் கொரியாவின் தெற்கு நகரமான கியோங்ஜு-யை சேர்ந்த பொறியாளர் கியோங் ஜங் என்பவர் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு கல்லறை அமைத்துள்ளார். அதில் “மற்ற பிரவுசர்களை பதிவிறக்குவதற்கு அது ஒரு நல்ல கருவியாக இருந்தது” என எழுதப்பட்டுள்ளது. அந்த கல்லறையின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4