ஹிஜாப் இல்லாமல் செல்லும் பெண்கள் விலங்குகள் என போஸ்டர் ஒட்டிய தலிபான்

#Women #Taliban
Prasu
4 years ago
ஹிஜாப் இல்லாமல் செல்லும் பெண்கள் விலங்குகள் என போஸ்டர் ஒட்டிய தலிபான்

ஆப்கானிஸ்தான் நாட்டில் ஹிஜாப் அணியாத பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று தலிபான்கள் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்கள்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். அதன்படி, பெண்கள் முழு உடலையும் மூடிக்கொண்டு தான் வெளியில் செல்ல வேண்டும் என்றனர்.

இந்நிலையில், ஹிஜாப் அணியாமல் வெளியில் செல்லும் பெண்கள் பற்றி சுவரொட்டிகளை தலிபான்கள் ஒட்டியிருக்கிறார்கள். ஹிஜாப் அணியாமல் செல்லும் முஸ்லிம் பெண்கள் மிருகங்களை போன்று தோற்றமளிக்க முயல்கிறார்கள் என்று எழுதப்பட்ட சுவரொட்டிகளை கந்தஹார் நகர் முழுக்க தலிபான்கள் ஒட்டி இருக்கிறார்கள்.

இதுபற்றி கந்தஹார் அமைச்சக தலைவராக இருக்கும் அப்துல் ரகுமான் தெரிவித்ததாவது, இந்த  சுவரொட்டிகளை ஒட்டியது நாங்கள் தான். தங்களின் முகத்தை மூடிக்கொள்ளமால் செல்லும் பெண்கள் குறித்து அவர்களின் குடும்பத்தினரிடம் கூறுவோம் என்று கூறியிருக்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4