அதிபர்களுக்கான விசேட அறிவித்தல்!
Mayoorikka
2 years ago

கொழும்பு புறநகர் பகுதிகள், வெளிமாவட்ட நகர எல்லைகள் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளின் அதிபர்களும், அடுத்த வாரம் பாடசாலைகளை மூடுவதா அல்லது ஒன்லைனில் செயல்படுவதா என்பதை தீர்மானிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கிராமப்புற பாடசாலைகளின் அதிபர்கள், போக்குவரத்து வசதிகளைப் பொறுத்து தங்கள் செயல்பாடுகள் குறித்து தீர்மானிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றும் அமைச்சு அறிவித்துள்ளது.



