இலங்கையில் மீண்டும் மூடப்படவுள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் தொடர் மின்னெட்டு ஏற்படும் அபாயம்!
Nila
2 years ago

போதுமான மசகு எண்ணெய் இல்லாமையினால் சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மீண்டும் மூடப்படவுள்ளது.
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் இது மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மசகு எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கைக்கு வருவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும், அதற்கு செலுத்துவதற்கு டொலர் இல்லாமையினால் அது இலங்கை வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த நிலையத்தை மூட வேண்டி ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில மாதங்களாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த நிலையம் அண்மையிலேயே திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



