ஆப்கானிஸ்தானில் குருத்வாராவில் குண்டுவெடிப்பு- 2 பேர் உயிரிழப்பு

#Afghanistan #Attack #Death
Prasu
4 years ago
ஆப்கானிஸ்தானில் குருத்வாராவில் குண்டுவெடிப்பு- 2 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சீக்கிய குருத்வாரா உள்ளது. இங்கு இன்று காலை 30 பேர் வழிபாடு நடத்திக் கொண்டிருந்தனர். 

அப்போது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். குருத்வாரா கர்கே பர்வான் பகுதியில் குண்டுகள் வெடித்தன. இதனால் குருத்வாராவுக்குள் இருந்த சீக்கியர்கள் அதிர்ச்சி அடைந்து வெளியே ஓடி வர முயன்றனர். 

தீவிரவாதிகள் குருத்வாராவுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் குருத்வாரா வின் காவலாளி அகமது என்பவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். உடனே பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் விரைந்து வந்தனர். 

அவர்கள் குருத்வாராவுக்குள் புகுந்த தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வருகிறார்கள். இதனால் அப்பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தது. குருத்வாரா வளாகத்தில் இரண்டு குண்டுகள் வெடித்தன. இதனால் பெரும் கரும்புகை வெளியேறியது.

விரவாதிகள் தாக்கு தலால் குருத்வாராவில் இருந்து வெளியேற முடியா மல் ஏராளமான சீக்கியர்கள் சிக்கி உள்ளனர். தாக்குதல் தொடங்கிய போது 3 பேர் வெளியே வந்து விட்டனர். 

இன்னும் 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அவர்களை மீட்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சீக்கிய பக்தர் ஒருவர் உயிரிழந்தார் என்று தகவல் வெளியாகி உள்ளது. 

மற்றவர்கள் நிலைமை பற்றி தெரியவில்லை. இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறும் போது, காபூலில் உள்ள புனித குருத்வாரா மீது தாக்குதல் நடத்தப்பட்டது 

குறித்து காபூலில் இருந்து வெளியான தகவல்களால் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம். அங்குள்ள நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். கூடுதல் விவ ரங்களுக்காக காத்தி ருக்கிறோம் என்று தெரிவித்துள்ளது

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4