உலகம் முழுவதும் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 51.86 கோடியாக உயர்வு

#Covid 19
Prasu
4 years ago
உலகம் முழுவதும் கொரோனாவால்  குணமடைந்தோர் எண்ணிக்கை 51.86 கோடியாக உயர்வு

சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் வருடம்  கொரோனா வைரஸ் தொற்று  கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது. 

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு  தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த  நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.36 கோடியாக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 86 லட்சத்து 60 ஆயிரத்து 364 பேர் குணமடைந்திருக்கின்றனர். ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63லட்சத்து 39 ஆயிரத்து 273 பேர் உயிரிழந்துள்ளனர். 

அமெரிக்காவில் ஒரே நாளில் 76,949 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 182 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4