இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட எரிபொருட்களின் விலைகள் அதிர்ச்சியில் மக்கள்!

Nila
2 years ago
இலங்கையில் மீண்டும் உச்சத்தை தொட்ட எரிபொருட்களின் விலைகள் அதிர்ச்சியில் மக்கள்!

நாட்டில் கடந்த சில மாதங்களாக எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னே மக்கள் இரவு பகலாக நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை தொடர்கிறது.

இந்நிலையில் நாளை முதல் எரிபொருள் சூத்திரத்தின் படி விலைகள் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் எரிபொருள் விலை அதிகரிப்பு நாளை அமுலுக்கு வரும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபன (CPC) வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஒவ்வொரு எரிபொருளின் விலையும் ரூ.50 க்கு மேல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

உலக சந்தையில் டொலர் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலை அதிகரிப்பு ஒவ்வொரு மாதமும் 24 ஆம் திகதி அமுலுக்கு வரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு முன்னதாக கூறியிருந்தது.

92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 74 ரூபாவினாலும், 95 ஒக்டேன் பெற்றோலின் விலை 78 ரூபாவினாலும், டீசல் லீற்றர் ஒன்றின் விலையை 56 ரூபாவினாலும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையை ரூபாவினாலும் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக CPC வட்டாரங்கள் தெரிவித்தன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!