ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் உயிரிழப்பு

#Death
Prasu
2 years ago
ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் உயிரிழப்பு

ஸ்பெயின் நாட்டுக்குள் நுழைய முயன்றபோது கூட்டநெரிசலில் சிக்கி 18 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஆப்பிரிக்க நாட்டில் பொருளாதார நெருக்கடி காரணத்தால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். 

இங்கு வறுமை பொருளாதார நெருக்கடி மற்றும் உள்நாட்டு மோதல் போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். 

இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் அமைந்துள்ள மெல்லிலா நகரத்திற்குள்  நுழைவதற்காக மொராக்கோ நாட்டின் எல்லையில் இரண்டாயிரத்திற்கும்  அதிகமான அகதிகள் குவிந்துள்ளனர். 

இந்தப் பகுதியில் பணியில் இருந்த மொராக்கோ எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அகதிகளை அங்கிருந்து கலைந்து போவதற்கு முயற்சி செய்துள்ளனர்.

இந்த முயற்சியில் இருதரப்புக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான அகதிகள் எல்லையில் உள்ள வேலியை தாண்டி மெல்லிலா நகருக்குள் செல்ல முயற்சித்தனர். 

இதனால்  கடும் கூட்ட நெரிசல் உருவாகி தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய அகதிகளில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள்  படுகாயமடைந்துள்ளனர். 

மேலும் இந்த சம்பவத்தால் ஸ்பெயின்-மொராக்கோ எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகின்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!