ரஷிய தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்கிறது, ஜி-7 நாடுகள் - ஜோ பைடன் அறிவிப்பு

#world_news #Russia #United_States
ரஷிய தங்கம் இறக்குமதிக்கு தடை விதிக்கிறது, ஜி-7 நாடுகள் - ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரைன் மீது போர் தொடுத்ததால், ரஷியாவுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே பொருளாதார தடை விதித்துள்ளன. இந்தநிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகள் அடங்கிய ஜி-7 நாடுகள் மாநாடு, நேற்று ஜெர்மனியில் உள்ள எல்மாவில் தொடங்கியது.

அதில் பங்கேற்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அங்கு சென்றுள்ளார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், ரஷியாவில் இருந்து தங்கம் இறக்குமதி செய்ய அமெரிக்காவும், இதர ஜி-7 நாடுகளும் தடை விதிக்க உள்ளதாக கூறினார். உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு, நாளை (செவ்வாய்க்கிழமை) வெளியாகிறது. எரிசக்திக்கு அடுத்தபடியாக ரஷியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் பொருள் தங்கம் ஆகும். எனவே, அதற்கு தடை விதித்தால், ரஷியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4