கொச்சி அருகே கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் கடலோர காவல்படையினரால் மீட்பு..!

கொச்சி அருகே கடலில் தத்தளித்த 5 மீனவர்கள் கடலோர காவல்படையினரால் மீட்பு..!

கேரளாவை சேர்ந்த மீனவர்கள் 6 பேர் பிகிலி என்ற படகில் கடந்த 28-ந்தேதி மீன்பிடிக்கச் சென்றனர். கொச்சியில் இருந்து வடமேற்கே 40 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஏற்பட்ட சீற்றம் காரணமாக அவர்களது மீன்பிடி படகு கவிழ்ந்தது.

இதையடுத்து கடலில் தத்தளித்த மீனவர்கள் உதவியை எதிர்பார்த்து உயிருக்கு போராடினர். இந்த நிலையில் அந்த பகுதி வழியாக சென்ற சரக்கு கப்பல் ஒன்று, மீனவர்கள் குறித்த தகவலை கொச்சியில் உள்ள கடல்சார் மீட்பு துணை மையத்திற்கு தெரிவித்தது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட கடலோர காவல்படை வீரர்கள், ரோந்து கப்பல் ஆர்யமான் மூலம் அப்பகுதிக்கு சென்றனர்.

தொடர்ந்து கூட்டு நடவடிக்கை மூலம் 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். எனினும் அவர்களை உடனடியாக அங்கிருந்து அழைத்து செல்வதில் தாமதம் ஆனதால், கடலோர காவல்படையின் நவீன ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. மீனவர்கள் ஒவ்வொருவராக கப்பலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக கொச்சிக்கு கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காணாமல் போன மேலும் ஒரு மீனவரை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4