சுவிற்சர்லாந்து உணவகத்தில் தட்டில் வைக்கப்பட்ட சாப்பாடு முழுவதையும் காலி செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

Prasu
3 years ago
சுவிற்சர்லாந்து உணவகத்தில் தட்டில் வைக்கப்பட்ட சாப்பாடு முழுவதையும் காலி செய்யாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை

சுவிட்சர்லாந்து நாட்டில்  Aargau என்ற மாகாணம் அமைந்துள்ளது.  இந்த மாகாணத்தில்  Baden நகரில்  Casanova restaurant என்னும் இந்திய உணவகம் இயங்கி கொண்டு  வருகிறது. 

இந்த உணவகத்துக்கு வருவோர், தங்கள் தட்டில் எடுக்கும் உணவு முழுவதையும் சாப்பிட்டு முடிக்காமல் மீதி வைத்தால் அவர்களுக்கு 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் விதிக்கப்படும் என  அறிவித்துள்ளது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாகவே அந்த உணவகத்தில் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்களில் 90 % பேர் இந்த நடைமுறையை ஆதரிக்கின்றனர்.

இதற்குக் காரணம் என்னவென்றால், பஃபே வகை உணவு, அதாவது நாமே தட்டை எடுத்துக்கொண்டு நமக்குத் தேவையான உணவுகளை எடுத்துக்கொள்ளும் வசதி கொண்ட உணவு முறையில் தான் இந்த உணவகம் செயல்பட்டு வருகிறது. 

எனவே மக்கள்  ஆசையில் தங்கள் தேவைக்கு அதிகமான உணவை எடுத்துக்கொள்கிறார்கள். பின்னர் அவற்றை முழுமையாக சாப்பிட முடியாமல் போய்விடுகிறது. இதனால் மீதமான உணவு குப்பைத் தொட்டியைச் சென்றடைகிறது. 

இப்படி உணவு வீணாவதைத் தவிர்ப்பதற்காகவே இந்த 5 சுவிஸ் ஃப்ராங்குகள் அபராதம் என்னும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த உணவக உரிமையாளரான Sulman Ghauri, இதுவரை யாரையும் அபராதம் செலுத்துமாறு வற்புறுத்தியதில்லை என்கிறார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4