பல ரயில் நிலையங்களின் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ராணுவப் பாதுகாப்பைக் கோரும் பணியில் இருந்து வருகின்றனர்

#SriLanka #Railway
பல ரயில் நிலையங்களின் ஸ்டேஷன் மாஸ்டர்கள் ராணுவப் பாதுகாப்பைக் கோரும் பணியில் இருந்து வருகின்றனர்

புகையிரத கட்டுப்பாட்டாளர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு காரணமாக இன்று காலை புகையிரத போக்குவரத்து தடைப்பட்டது. இன்று காலை திட்டமிடப்பட்ட ரயில்களில் பாதியளவு ரயில்கள் இயங்கவில்லை என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

குறைந்த எண்ணிக்கையிலான ரயில்களால் பயணிகள் கலவரத்தில் ஈடுபடும் சம்பவங்கள் பலமுறை நிகழ்ந்துள்ளதாக ரயில் நிலைய மாஸ்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கோட்டை, மருதானை, ராகம, கொள்ளுப்பிட்டி மற்றும் பாணந்துறை ஆகிய நிலையங்களில் நிலைய அதிபர்கள் தமது கடமைகளை விட்டுச் சென்றுள்ளதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார். புகையிரத நிலையங்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!