காணாமல் போன சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்களை கண்டெடுத்த பாகிஸ்தான்
அரபிக்கடலில் செவ்வாய்க்கிழமை காணாமல் போன பாகிஸ்தானிய சரக்கு விமானத்தின் உடைந்த பாகங்கள், 12 மணி நேர தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு கண்டறியப்பட்டு அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பாகிஸ்தானுக்குச் சென்று கொண்டிருந்த கே2 ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 737-400 ரக சரக்கு விமானம், செவ்வாய்க்கிழமை கராச்சிக்கு மேற்கே சுமார் 300 கிலோமீட்டர் (186 மைல்கள்) தொலைவில் ரேடாரில் இருந்து மறைந்தது.
கராச்சிக்கு மேற்கே சுமார் 155 கடல் மைல் தொலைவில் ரேடார் தொடர்பு மற்றும் தகவல் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு முன்பு, விமானம் திடீரென திசை மாறி வேகமாக கீழ்நோக்கி இறங்குவது காணப்பட்டதாக ஆணையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
பலுசிஸ்தான் மாகாணத்தின் குவாதர் மாவட்டத்தில் உள்ள ஓர்மாரா நகருக்கு தெற்கே சுமார் 53 கடல் மைல் தொலைவில் விமானத்தின் உடைந்த பாகங்கள் மீட்கப்பட்டதாக, அமெரிக்க சமூக ஊடக நிறுவனமான Xல் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதனை தொடர்ந்து தற்போது, காணாமல் போன மாலுமிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே