மாணவன் ஒருவர் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டுப்பிடித்துள்ளார்

Nila
2 years ago
மாணவன் ஒருவர் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டுப்பிடித்துள்ளார்

தேசிய பாடசாலை மாணவன் ஒரவர் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை கண்டுப்பிடித்துள்ளார்.

யாழ்பாணம் வடமராட்சி காட்லிக் கல்லூரி மாணவன் செல்வச்சந்திரன் சிறிமன் என்பவர் கலப்பு வகையில் துவிச்சக்கர வண்டி ஒன்றினை இன்று(06) அறிமுகம் செய்துள்ளார்.

துவிச்சக்கர வண்டியில் மோட்டார் பொருத்தியும், மீள் சுழற்சி பொருட்களை பயன்படுத்தியும் அதனை கண்டு பிடித்துள்ளார்.

குறித்த கலப்பு துவிச்சக்கர வண்டி அறிமுக விழா இன்றைய தினம் இளம் புத்தாக்குநர் கழக இராஜ அரவிந்தன் தலைமையில் காட்லிக் கல்லூரி ஆய்வுகூட மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.

இதில் பாடசாலை அதிபர் தம்பையா கலைச்செல்வன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இந்த புதிய படைப்பை அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

தற்போது எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இவ்வாறான கண்டுபிடிப்பு மிக முக்கியத்துவம் பெறுவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பாடசாலை உப அதிபர் ஆசிரியர்கள், நலன்விரும்பிகள், பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.  

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!