உலக அளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 53 கோடியைக் கடந்தது

#Covid 19
Prasu
4 years ago
உலக அளவில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 53 கோடியைக் கடந்தது

சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து தொடர்ந்து பாதிப்பு ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 53 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 55.61 கோடியைக் கடந்துள்ளது. 

மேலும், கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை உலகம் முழுவதும் 63.64 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4