பொலிஸ் உத்தியோகத்தர் எனக் கூறி பணமோசடி செய்த நபர் கைது
பெற்றோல், எரிவாயு மற்றும் உரம் வழங்குவதாகக் கூறி பொலிஸ் உத்தியோகத்தர் போல் காட்டிக்கொண்டு பணத்தை மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை அனுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இதன்படி, அனுராதபுரம், நொச்சியாகம மற்றும் கலென்பிந்துனுவெவ பொலிஸ் நிலையங்களுக்கு இது தொடர்பில் 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன் விசாரணைகளின் போது நீர்கொழும்பு – கட்டுபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மோசடி செய்யப்பட்ட தொகை ஏழு லட்சத்து ஆயிரம் ரூபாய். அவர் கைது செய்யப்படும் போது 2 கிராம் 420 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு எதிராக நீர்கொழும்பு மற்றும் மாரவில நீதவான் நீதிமன்றங்களும் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.