சமூகவலைத்தளங்களை முடக்க தயாராகின்றது அரசாங்கம்?
Prabha Praneetha
2 years ago
கொழும்பில் தொலைத்தொடர்பு சேவைகளை குரல் அழைப்புகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்தி உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஜயந்த டி சில்வாவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதியும் கேட்டறிந்துள்ளதாகவும், அதனை தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சமூக ஊடக வலையமைப்புகள் எந்த வகையிலும் தடை செய்யப்படாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.