பாதுகாப்பு வேலிக்குள் ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைந்து போராட்டம்!
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் கொழும்பில் பாரிய மக்கள் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக நாடளாவிய ரிதியில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கொழும்புக்கு படையெடுத்துள்ளனர்.
இவர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில், நடைபாதையாகவே “கோட்டா கோ கம” என்ற போராட்ட இடத்திற்கு செல்கின்றனர்.
இதன்போது பாதுகாப்பு படையினர் வீதிமறியல் வேலிகளை போட்டு அவர்களை தடுக்க முற்பட்ட போதும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அந்த தடைகளை தகர்த்து, பாதுகாப்பு படையினருடன் மோதலில் ஈடுபட்டு தமது பயணத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில், கொழும்பு கோட்டை பகுதியிலும், லோட்டஸ் வீதியிலும் பற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஜனாதிபதி மாளிகைக்கு செல்லும் வீதி அமைத்திலும் பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளமையும் காணக்கூடியதாக உள்ளது.