உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு

#Ukraine #Russia #War #Missile #Attack
Prasu
3 years ago
உக்ரைனில் அடுக்குமாடி குடியிருப்பு மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் - 15 பேர் உயிரிழப்பு

உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் ரஷிய படைகள் வெடிகுண்டு தாக்குதல்களில் ஈடுபட்டன. 

20-க்கும் மேற்பட்ட பீரங்கி, மோட்டார் மற்றும் ராக்கெட் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் எல்லையை நோக்கி ரஷிய படைகள் முன்னேறி வருவதாகவும் கிழக்கு லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் நகரின் மீது ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 5 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று பலத்த சேதமடைந்தது. 

இந்த தாக்குதலால் கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. அவர்களை மீட்கும் பணியில் உக்ரைன் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4