அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.07.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 13.07.2022

மேஷம்
அசுவினி : தடைபட்டிருந்த வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். நிதிநிலையை சரிசெய்வீர்கள்.
பரணி : எதிர்பார்ப்பு நிறைவேறும். உங்கள் அணுகுமுறையால் நினைத்ததை அடைவீர்கள்.
கார்த்திகை 1 : வரவேண்டிய பணம் வசூலாகும். குடும்பத்தில் இருந்து வந்த நெருக்கடி விலகும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : சில எதிர்ப்புகளால் உங்கள் செயல் தள்ளிப்போகும்.விழிப்புணர்வு தேவை.
ரோகிணி : அரசு வழி முயற்சிகளில் கவனம் அவசியம். சட்ட ரீதியாக சங்கடம் ஏற்படலாம்.
மிருகசீரிடம் 1, 2 : வீண் அலைச்சலும் செலவுகளும் அதிகரிக்கும். தொழிலில் சில தடைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்ப்பு நிறைவேறும். மகிழ்ச்சியான செயல் நடைபெறும்.
திருவாதிரை : உறவினர்களின் ஆதரவால் நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3 : வருமானம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கடகம்
புனர்பூசம் 4 : மறைமுக சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உங்கள் செயலில் முன்னேற்றம் காண்பீர்கள்.
பூசம் : நீங்கள் மேற்கொள்ளும் செயலில் வெற்றியாகும். உங்கள் செல்வாக்கு உயரும்.
ஆயில்யம் : நண்பர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி சாதகமாகும். நன்மை அதிகரிக்கும் நாள்.

சிம்மம்
மகம் : சொத்துகளில் ஏற்பட்ட சிக்கலை பெரியோரின் ஆதரவுடன் பேசி தீர்ப்பீர்கள்.
பூரம் : உறவினர்களிடம் ஏற்பட்ட மனக்கசப்பு விலகும். விலகிச் சென்றவர் மீண்டும் வந்து இணைவர்.
உத்திரம் 1 : அலுவலகத்தில் உங்கள் செயலுக்கு பாராட்டு அதிகரிக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : தாய்வழி உறவினரின் ஆதரவால் செயலில் லாபம் காண்பீர்கள்.
அஸ்தம் : எதிர்பார்த்த குழந்தை பேறுக்கான நல்ல தகவல் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்
சித்திரை 1, 2 : குருபகவானின் அருளால் நேற்றைய எண்ணம் ஒன்று நிறைவேறும்.

துலாம்
சித்திரை 3, 4 : குடும்ப உறவினர் ஒருவரால் இன்று சங்கடம் ஏற்பட்டு மறையும். எச்சரிக்கை தேவை.
சுவாதி : நண்பர்களுடன் கவனமாக பழகுங்கள். மற்றவர் செய்யும் தவறுக்கு நீங்கள் ஆளாகலாம்.
விசாகம் 1, 2, 3 : துணிச்சலுடன் செயல்பட்டு ஒரு செயலில் வெற்றி காண்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.

விருச்சிகம்
விசாகம் 4 : கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். புதிய சொத்து வாங்கும் முயற்சி நிறைவேறும்.
அனுஷம் : பெரியோரின் ஆலோசனையால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும்.
கேட்டை : பணிபுரியும் இடத்தில் உங்கள் ஆலோசனைகளுக்கு மதிப்பு அதிகரிக்கும்.

தனுசு
மூலம் : உங்கள் மனம் தனிமையை விரும்பும். செயல்களில் குளறுபடி உண்டாகும்.
பூராடம் : மற்றவர்களால் உங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் போகும். நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள்.
உத்திராடம் 1 : உங்கள் எண்ணப்படி செயல்படுவீர்கள். நேற்றைய முயற்சி ஒன்று நிறைவேறும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வரவுகளை விட செலவு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் நிதானம் தேவை.
திருவோணம் : மற்றவர்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 : பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். செயலில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : முயற்சி பலிக்கும் நாள். எதிர்பார்த்த பணவரவு வந்து சேரும்.
சதயம் : புதிய முயற்சி வெற்றியாகும். போட்டிகளை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3 : தொழிலில் உங்கள் அணுகுமுறையால் ஆதாயம் காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மீனம்
பூரட்டாதி 4 : உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு அகலும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
உத்திரட்டாதி : தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய வேலையாட்களுக்கு வாய்ப்பு வழங்குவீர்கள்.
ரேவதி: உத்தியோகத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அதிகாரியின் பாராட்டு கிடைக்கும்