அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.07.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 14.07.2022

மேஷம்
அசுவினி : பிறரால் செய்ய முடியாத ஒரு செயலை செய்து முடிப்பீர்கள்.
பரணி: தொழிலில் ஏற்பட்ட தடைகளை சரிசெய்து லாபம் காண்பீர்கள்.
கார்த்திகை 1 : நீண்ட நாட்களாக சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : எதிர்பார்த்த தகவல் வீடு வந்து சேரும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும்.
ரோகிணி : குடும்பத்தில் உண்டான பிரச்னைகளை சரி செய்வீர்கள். புதிய முயற்சி நிறைவேறும்.
மிருகசீரிடம் 1, 2 : தொழிலில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : சந்திராஷ்டமத்தினால் சங்கடம் உண்டாகும்.விழிப்புணர்வு தேவை.
திருவாதிரை : எதிர்பார்த்த செயல் ஒன்று நிறைவேறாமல் போகும். வார்த்தைகளில் கவனம் தேவை.
புனர்பூசம் 1, 2, 3 : பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களும் எதிராக செயல்படலாம்.

கடகம்
புனர்பூசம் 4 : தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு நீங்கள் விரும்பியதை அடைவீர்கள். நன்மையான நாள்.
பூசம் : நண்பர்களின் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சி ஒன்று வெற்றி பெறும்.
ஆயில்யம் : எதிர்பாராத லாபம் வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.

சிம்மம்
மகம் : வெளி இடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பகைவர்கள் விலகிச்செல்வர்.
பூரம் : எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.
உத்திரம் 1 : அரசு வழியிலான முயற்சி அனுகூலமாகும். உங்கள் கோரிக்கை நிறைவேறும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்திற்காக சேமிப்பை ஏற்படுத்துவீர்கள்.
அஸ்தம் : வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். லாபம் அதிகரிக்கும்.
சித்திரை 1, 2: உறவினர்களின் ஆதரவுடன் குடும்பத்தில் நன்மை உண்டாகும். வருமானம் உயரும்.

துலாம்
சித்திரை 3, 4 : அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்ப்பு ஒன்றில் பின்னடைவு ஏற்படும்.
சுவாதி : தாயாரின் உடல் நிலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டி வரும்.
விசாகம் 1, 2, 3 : வழக்கமான செயல்களும் இழுபறியாகும். பண வரவில் தடை உண்டாகும்.

விருச்சிகம்
விசாகம் 4 : வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர்கள். உங்கள் முயற்சி வெற்றியாகும்.
அனுஷம்: அரசு வழியிலான செயலில் எதிர்பார்த்த நன்மை உண்டாகும்.
கேட்டை: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். அதிகாரிகள் பாராட்டுவர்.

தனுசு
மூலம் : நேற்று வரை இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று நிறைவேறும்.
பூராடம்: வேலை இடத்தில் உங்கள் உழைப்பை பாராட்டுவர். யோகமான நாள்.
உத்திராடம் 1 : இறை சிந்தனை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தகாரரை சேர்ப்பீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : வேலை பளு அதிகரிக்கும். செயல்களில் கவனம் அவசியம்.
திருவோணம் : பிறருடன் கருத்து வேறுபாடு உண்டாகும். அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள்.
அவிட்டம் 1, 2: குடும்பத்தினருடன் மனவருத்தம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் தாமதமாகும்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : புதிய முயற்சிகள் இன்று வேண்டாம். வழக்கமான செயல்களில் இழுபறியாகும்.
சதயம் : வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் காண முடியாது. வரவு செலவில் கவனம் தேவை.
பூரட்டாதி 1, 2, 3 : எளிதில் நிறைவேறும் என்று நீங்கள் நினைத்த செயல் தள்ளிப் போகும்.

மீனம்
பூரட்டாதி 4 : மற்றவர் விரும்பும் வகையில் உங்கள் செயல்பாடுகள் இருக்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரட்டாதி : உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நீங்கள் நினைத்தது நடந்தேறும்.
ரேவதி: புதிய முயற்சி ஒன்று பலிதமாகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.