பண மோசடி மற்றும் ஊழல் வழக்கு - பாகிஸ்தான் பிரதமரின் மகன் குற்றவாளியாக அறிவிப்பு

#Pakistan #PrimeMinister
Prasu
2 years ago
பண மோசடி மற்றும் ஊழல் வழக்கு - பாகிஸ்தான் பிரதமரின் மகன் குற்றவாளியாக அறிவிப்பு

மோசடி வழக்கில் கைதான பிரதமர் மகன் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக கடந்த ஏப்ரல் மாதம் செபாஷ் ஷெரிப் பதவியேற்றார். கடந்த 2020 ஆம் ஆண்டு செபாஷ் ஷெரிப் மற்றும் அவருடைய மகன்கள்‌ ஹம்சா, சுலைமான் மீது ஊழல் தடுப்பு மற்றும் பண மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி மோசடி மற்றும் ஊழல் வழக்கு விசாரணைக்கு வந்த போது புலனாய்வு பிரிவு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது.

இதன் காரணமாக செபாஷ் ஷெரிப், சுலைமான் மற்றும் ஹம்ஸா ஆகிய 3 பேருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது சுலைமான் நாட்டில் இல்லாததால் கைதுவாரண்டை செயல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றத்தில் சுலைமான் வெளிநாட்டில் இருப்பது தெரியப்படுத்தப்பட்டதால் சுலைமானை தேடப்படும் குற்றவாளியாக நீதிபதி அறிவித்தார்.`

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!