அவுஸ்திரேலியாவில் குடியேற விருப்பமா...? 300 வகையான வேலைவாய்ப்புக்கள் வெளிவந்துள்ளன....!

Nila
3 years ago
அவுஸ்திரேலியாவில் குடியேற விருப்பமா...? 300 வகையான வேலைவாய்ப்புக்கள் வெளிவந்துள்ளன....!

ஆஸ்திரேலியாவிலுள்ளவர்கள் மட்டுமல்லாமல், வெளிநாட்டிலுள்ளவர்களும் திறமை அடிப்படையில் மேற்கு ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர ஏதுவாக state nomination-க்கு விண்ணப்பிக்க முடியுமென அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

2022-23 குடிவரவு திட்டத்தின் கீழ் மேற்கு ஆஸ்திரேலிய state nomination-க்கு ranking system ஊடாக தகுதியுள்ள skilled workers விண்ணப்பிக்க முடியும்.

மேற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து தாக்கல் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் எனவும், அதற்கு அடுத்தபடியாக ஆஸ்திரேலியாவின் ஏனைய பகுதிகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும், அதற்கு அடுத்தபடியாக வெளிநாடுகளிலிருந்து கிடைக்கும் விண்ணப்பங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும் எனவும் மேற்கு ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

General அல்லது Graduate பிரிவுகளின் கீழ் state nomination-க்கு விண்ணப்பிக்க முடியும். இதேவேளை Graduate stream-இன் கீழ் அதிகளவானோர் விண்ணப்பிக்க வசதியாக, மேற்கு ஆஸ்திரேலியாவின் Graduate Occupation List விரிவாக்கப்பட்டு 300க்கும் மேற்பட்ட தொழில்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறித்த தொழிற்பட்டியல் கீழே தரப்பட்டுள்ள அதேநேரம், இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட முழுமையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள migration.wa.gov.au என்ற இணைப்பிற்கு செல்லவும்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4