அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 20.07.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 20.07.2022

மேஷம்
அசுவினி : நேற்று வரை இருந்து வந்த தடை விலகும். குருவால் நன்மை அதிகரிக்கும்.
பரணி : புதிய முயற்சி ஒன்றில் ஈடுபட்டு லாபம் காண்பீர்கள். நெருக்கடி விலகும்.
கார்த்திகை 1 : குடும்பத்தினரின் நலன் கருதி மேற்கொண்ட செயல் நிறைவேறும்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4 : வருமானம் அதிகரிக்கும். இருப்பிடத்தை மாற்றம் செய்ய நினைப்பீர்கள்.
ரோகிணி : வேலைக்காக மேற்கொண்ட முயற்சி நிறைவேறும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்.
மிருகசீரிடம் 1, 2 : உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம், ஊர்மாற்றம் குறித்த தகவல் வரும்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4 : எதிர்பார்த்த முயற்சி வெற்றியாகும். வரவு அதிகரிக்கும் நாள்.
திருவாதிரை : புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
புனர்பூசம் 1, 2, 3: குடும்பத்திற்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

கடகம்
புனர்பூசம் 4 : குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு உறவினர் ஆதரவுடன் தீர்வு காண்பீர்கள்.
பூசம் : வருவாயை எதிர்பார்த்து நீங்கள் மேற்கொண்ட முயற்சி லாபத்தை உண்டாக்கும்.
ஆயில்யம்: உத்தியோகத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை அடைவீர்கள். செல்வாக்கு அதிகரிக்கும்.

சிம்மம்
மகம் : இன்று மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செயல்களில் கவனம் தேவை.
பூரம் : யோசித்து செயல்பட வேண்டிய நாள். பயணத்தால் அலைச்சல் அதிகரிக்கும்.
உத்திரம் 1: வரவு செலவில் சங்கடம் ஏற்படும். எதிர்பாராத செலவால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள்.

கன்னி
உத்திரம் 2, 3, 4 : உங்கள் முயற்சி எளிதாக நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
அஸ்தம் : கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். புதிய நட்பினால் உங்கள் எண்ணம் ஈடேறும்.
சித்திரை 1, 2 : தொழிலில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். நட்பு வட்டம் விரிவடையும்.

துலாம்
சித்திரை 3, 4 : தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் லாபம் காண்பீர்கள்.
சுவாதி : எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். உங்கள் நீண்டநாள் கனவு நிறைவேறும்.
விசாகம் 1, 2, 3 : செயலில் இருந்து வந்த தடை விலகும். தொல்லை கொடுத்தவர்கள் விலகுவார்.

விருச்சிகம்
விசாகம் 4 : வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சி நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம் : நேற்று இழுபறியாக இருந்த ஒரு செயல் இன்று முடிவடையும்.
கேட்டை : நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி எளிதில் நிறைவேறும். யோகமான நாள்

தனுசு
மூலம் : உற்சாகத்துடன் செயல்பட்டு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.
பூராடம்: உத்தியோகத்தில் மேலதிகாரியின் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.
உத்திராடம் 1: தடைபட்டிருந்த செயல் இன்று நிறைவேறும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4 : உறவினர்கள் ஒத்துழைப்புடன் முயற்சி ஒன்றில் வெற்றி காண்பீர்கள்.
திருவோணம் : மறைமுக எதிர்ப்புகளை முறியடித்து உங்களுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
அவிட்டம் 1, 2: வரவேண்டிய பணம் வந்து சேரும். புதிய முயற்சி ஒன்றில் ஈடுபடுவீர்கள்.

கும்பம்
அவிட்டம் 3, 4 : வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும்.
சதயம் : உடல் நலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். அரசு வழியில் ஆதாயம் காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: குடும்ப நலன் கருதி மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

மீனம்
பூரட்டாதி 4 : பொதுகாரியங்களில் துணிச்சலாக செயல்படுவீர்கள். மதிப்பு கூடும் நாள்.
உத்திரட்டாதி : நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். நிம்மதியான நாள்
ரேவதி: உங்கள் மனம் விரும்பியபடி செயல்பட்டு ஒரு முயற்சியில் வெற்றி காண்பீர்கள்