அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.07.2022

#Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 years ago
அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 21.07.2022

மேஷம்
அசுவினி: கவனமுடன் செயல்படுவதால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.
பரணி: மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போகும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் கவனம் தேவை. கொடுக்கல் வாங்கலில் நிதானம் அவசியம்.

ரிஷபம்
கார்த்திகை 2, 3, 4: லாப குரு வக்கிரமடைந்துள்ளதால் பொருளாதார தடை உண்டாகும்.
ரோகிணி: செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் விவாதங்கள் உண்டாகும்.
மிருகசீரிடம் 1, 2: எதிர்பார்ப்பு இழுபறியாகும். முயற்சி தள்ளிப்போகும். கவனமுடன் செயல்படுங்கள்.

மிதுனம்
மிருகசீரிடம் 3,4: குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரும்.
திருவாதிரை: நீண்ட நாட்களுக்குப் பின் உங்கள் எண்ணம் ஒன்று நிறைவேறும்.
புனர்பூசம் 1, 2, 3: உங்களை விட்டு விலகிச் சென்ற ஒருவர் மீண்டும் தேடி வருவார்.

கடகம்
புனர்பூசம் 4: வாய்ப்புகளைப் பயன்படுத்தி எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.
பூசம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள். முயற்சி நிறைவேறும்.
ஆயில்யம்: நண்பர்களின் பிரச்னைகளில் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள்.

சிம்மம்
மகம்: இரண்டு நாட்களாக ஏற்பட்ட நெருக்கடி விலகும். பண முயற்சி பலிதமாகும்.
பூரம்: தடைபட்ட செயல்களில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
உத்திரம் 1: அஷ்டம குரு வக்கிரமடைந்துள்ளால் அதிர்ஷ்ட வாய்ப்பு தோன்றும்.

கன்னி
உத்திரம் 2, 3, 4: சந்திராஷ்டமம் என்பதால் செயலில் நெருக்கடி தோன்றும். மனம் சோர்வடையும்.
அஸ்தம்: முயற்சியில் தாமதம் உண்டாகும். அடுத்தவர் விஷயத்தில் தலையிட வேண்டாம்.
சித்திரை 1, 2: மற்றவர் செயல்களால் உளைச்சலுக்கு ஆளாவீர்கள். அமைதி காப்பது நல்லது.

துலாம்
சித்திரை 3, 4: சத்ரு ஸ்தானாதிபதி வக்கிரம் என்பதால் முயற்சிகள் எளிதாக நிறைவேறும்.
சுவாதி: குடும்பத்தில் உண்டான சங்கடம் விலகும். உங்கள் முயற்சிகள் வெற்றியாகும்.
விசாகம் 1, 2, 3: தடைகள் விலகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.

விருச்சிகம்
விசாகம் 4: தடைகளை விலக்கி புதிய பாதையில் பயணம் செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தி வரும். புதிய முயற்சிகள் நன்மையாகும்.
கேட்டை: மற்றவரால் முடிக்க முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்

தனுசு
மூலம்: குடும்பத்தின் அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்வீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
பூராடம்: எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சேமிப்பில் உங்கள் கவனம் செல்லும்.
உத்திராடம் 1: எதிர்பார்த்த மகிழ்ச்சியை அடைவீர்கள். சங்கடம் விலகும். புதிய பொருள் வாங்குவீர்கள்.

மகரம்
உத்திராடம் 2, 3, 4: அலைச்சல் அதிகரித்தாலும் ஆதாயம் உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.
திருவோணம்: வாகனம் வாங்கும் முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் கவனம் அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2: எதிர்பார்த்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் கனவுகள் நிறைவேறும்.

கும்பம்
அவிட்டம் 3, 4: நீண்ட நாளாக முடிவிற்கு வராமல் இருந்த பிரச்னை இன்று முடிவிற்கு வரும்.
சதயம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் செயல்களில் லாபம் காண்பீர்கள்.
பூரட்டாதி 1, 2, 3: சகோதரர் உதவியுடன் முயற்சியில் வெற்றி காண்பீர்கள். நிதிநிலை உயரும்.

மீனம்
பூரட்டாதி 4: வக்கிர குருவால் சங்கடம் விலகும். நீண்டநாள் முயற்சி ஒன்று நிறைவேறும்.
உத்திரட்டாதி: பழைய பிரச்னை முடிவிற்கு வரும். வருமானத்தை பெருக்க முயற்சிப்பீர்கள்.
ரேவதி: கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும்.