டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Prabha Praneetha
2 years ago
டெங்கு நோயாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரை 43 ஆயிரம் அளவிலான டெங்கு நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரியில் இருந்து டெங்கு நோய்க்காக சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் சுகாதார பணியகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

அதிலும் ஜூலை மாதம் ஆரம்பம் தொட்டு 21ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மாத்திரம் எட்டாயிரம் டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து நாளைய தினம் இலங்கையின் அனைத்து அரச, தனியார் நிறுவனங்களிலும் குறைந்தது ஒரு மணிநேர டெங்கு தடுப்பு வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க சுகாதார சேவைகள் பணியகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது