ஆடுகளத்தில் இருந்து கண்ணீருடன் விடைப்பெற்றார் நெய்மர்!! நெகிழ்ச்சியான தருணம்!
2026 ஃபிஃபா உலகக் கோப்பையின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசில் அணி, நோர்வேயிடம் தோல்வியை சந்தித்தது.
இந்த போட்டியுடன் உலக கால்பந்து ஜாம்பவான் நெய்மர் தனது 34 ஆவது வயதில் போட்டிகளில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார். நெய்மர் பிரேசில் அணிக்காகதனது கடைசிபோட்டியை விளையாடி விட்டதாக அறிவித்துள்ளார்.
இறுதி விசில் ஒலித்த பிறகு, நெய்மர் ஆடுகளத்தில் கண்ணீர்விட்டு அழுதார். பின்னர், குளோபோ எஸ்போர்டே டிவி-க்கு அளித்த பேட்டியில் தனது சர்வதேச ஓய்வை உறுதிப்படுத்தினார்.
நெய்மரின் ஆட்டம் சமீப ஆண்டுகளில் சரிவைச் சந்தித்து வருகிறது, மேலும் காயங்களும் சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன.
வலது கால் கெண்டைத்தசை காயத்துடன் உலகக் கோப்பைக்கு வந்த அவர், அதிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து வருகிறார்.
இந்தத் தொடரில் நெய்மர் பிரேசில் அணி சார்பில் மாற்று வீரராக களமிறங்கியமை குறிப்பிடத்தக்கது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே