மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி
Prabha Praneetha
2 years ago
போக்குவரத்துக்கான எரிபொருள் விநியோகம் தொடருமானால் மரக்கறிகளின் விலை மேலும் குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீப நாட்களாக, எரிபொருள் பிரச்சினையால், பொருளாதார மையங்களுக்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.
ஆனால் தற்போது பொருளாதார மையங்களுக்கு கணிசமான அளவு மரக்கறிகள் வருவதால் அவற்றின் விலையில் சிறிது வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கும் கடந்த நாட்களை விட இன்று அதிகளவு மரக்கறிகள் கிடைத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்
மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலை இன்று 20 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக மெனிங் பொது வர்த்தக சங்கத்தின் பிரதித் தலைவர் பிரபாத் சுசந்த தெரிவித்துள்ளார்.