பர்மிங்காமில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள்

Prasu
3 years ago
பர்மிங்காமில் கோலாகலமாக தொடங்கிய காமன்வெல்த் போட்டிகள்

உலகின் மூன்றாவது பெரிய விளையாட்டுத் திருவிழாவான காமன்வெல்த் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காம் நகரில் தொடங்கியது. 

இந்த 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மொத்தம் 20 விளையாட்டுகளில் 280 பந்தயங்கள் நடத்தப்படுகிறது. 

20 ஓவர் பெண்கள் கிரிக்கெட், ஜூடோ ஆகிய போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. 

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, இங்கிலாந்து, வங்காளதேம், ஜமைக்கா, மலேசியா, நைஜீரியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, இலங்கை, கென்யா, ஸ்காட்லாந்து உள்பட 72 நாடுகளை சேர்ந்த 5 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். 

இந்த ஆண்டு போட்டிக்கான இந்திய அணியில் 215 வீரர், வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். 16 விளையாட்டுகளில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணியினர் வழக்கம் போல் குத்துச்சண்டை, பேட்மிண்டன், பளுதூக்குதல், மல்யுத்தம், டேபிள் டென்னிஸ் ஆகியவற்றில் அதிக பதக்கம் வெல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், காமன்வெல்த் விளையாட்டு போட்டி இந்திய நேரப்படி நேற்று இரவு 11.30 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழா அணிவகுப்பில் பங்கேற்கும் இந்திய அணிக்கு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்றவரும், முன்னாள் உலக சாம்பியனுமான இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் ஆண்கள் ஹாக்கி அணி கேப்டன் மன்பிரீத் சிங் ஆகியோர்தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்திச் சென்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4