எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு!

Mayoorikka
2 years ago
எரிசக்தி அமைச்சரின் விசேட அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் உள்ள 1,190 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் 962 எரிபொருள் நிலையங்கள் தற்போது தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் எரிபொருளை விநியோகிக்க ஏற்றுக் கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, நேற்றைய தினம் 657 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து இந்த முறைப்படி எரிபொருள் விநியோகிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு 8.30 வரை தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திற்காக 4,651,911 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களின் எண்ணிக்கை 27 லட்சத்தை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் QR குறியீட்டின் படி எரிபொருள் விநியோகத்தை ஆரம்பிக்க எரிசக்தி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.