8 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

Prathees
2 years ago
8 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம்

8 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் உட்பட 17 பொலிஸ் அதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் அங்கீகாரத்திற்கு அமைய இந்த இடமாற்றங்கள் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஓ ஹேவாவிதாரண பொலன்னறுவை பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடற்படைப் பிரிவின் பணிப்பாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.எஸ்.பி டி சில்வா, பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.பி.டி ஜயலத் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் பதவியில் இருந்து அமைச்சர் பாதுகாப்பு பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.கே.ஐ.டி சில்வா கம்பஹா பிரிவின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து கம்பளை பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.எம்.பி.என் ரத்னயன கம்பளை பிரதேசத்தின் பொறுப்பதிகாரி பதவியில் இருந்து கம்பஹா பிரிவின் பொறுப்பதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பிரதமரின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.பமல்தீன் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி டி வி பத்திரன, களப்படைத் தலைமையகத்திலிருந்து கடற்படைப் பிரிவின் பணிப்பாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.ஆர்.எச்.கமகே, களப்படை தலைமையகத்தில் இருந்து பொலன்னறுவை பிரதேச அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பதுளை பிரிவில் கடமையாற்றிய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.ஜே.எம்.குணவர்தன நிகவெரட்டிய பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும், ஏழு பிரதான பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் பரிசோதகர் ஆகியோர் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.