உவிந்து விஜேவீர உட்பட நான்கு போராட்டக்காரர்களுக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி பதவி?

Prathees
2 years ago
உவிந்து விஜேவீர உட்பட நான்கு போராட்டக்காரர்களுக்கு தேசிய பட்டியல் மூலம் எம்.பி பதவி?

மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகர் ரோஹன விஜேவீரவின் புதல்வர் உவிந்து விஜேவீர உட்பட நான்கு இளைஞர், யுவதிகளுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள் வழங்கப்பட வேண்டுமென யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான பிரேரணை அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுடன் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன உள்ளிட்ட குழுவினரால் கலந்துரையாடப்பட்டுள்ளது.

தேசிய பட்டியலிலிருந்து நியமிக்கப்பட்டுள்ள 4 எம்.பி.க்கள் வெளியேறி இந்த இளைஞர்களுக்கு இடம் வழங்க வேண்டும் என இங்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

உவிந்து விஜேவீரவைத் தவிர ஏனையவர்கள் போராட்டத்தை முன்னெடுத்த இளம் பெண்களாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரேரணை தொடர்பில் நல்ல பதில்கள் கிடைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!