சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பாடசாலைகள் மூடல்

Prathees
3 years ago
சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவில் பாடசாலைகள் மூடல்

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் இன்று மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீரற்ற காலநிலையை கருத்தில் கொண்டு மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இதேவேளை, மலையடிவாரம் சரிந்து வீழ்ந்தமையினால், மலையகப் பாதையில் பயணிக்கும் புகையிரத சேவை மேலும் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ரயில் பாதையில் விழுந்த மண் மற்றும் கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நில்வலா ஆற்றுப் படுகையின் தாழ்நிலப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள சிறு வெள்ளப்பெருக்கு தொடரும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4