பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை!

Prabha Praneetha
2 years ago
பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை!

பொருளாதார நெருக்கடிகாரணமாக ஆடை உற்பத்தி துறை வீழ்ச்சியடைந்துள்ளதோடு, ஆடை தொழிற்சாலைகளை மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நெருக்கடி, மின்சார நெருக்கடி, போன்றவற்றினால் ஆடை உற்பத்தி துறையானது பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள் மற்றும் மின்சார நெருடிக்கடியினால் உரிய நேரத்தில் தங்களது உற்பத்திகளை வழங்க முடியாது போயுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் சர்வதேசத்திடமிருந்து இலங்கை பொருட்களுக்கான கேள்வி குறைவடைந்துள்ளதாகவும் வர்த்தக வலய சேவையாளர்களின், தேசிய மத்திய நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் காமினி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.