கத்தியுடன் திருட முயன்ற முகமூடி கொள்ளையனை துணியால் விரட்டிய வீரப்பெண்

Prasu
3 years ago
கத்தியுடன் திருட முயன்ற முகமூடி கொள்ளையனை துணியால் விரட்டிய வீரப்பெண்

நெதர்லாந்தில் ஒரு பெண் கத்தி ஏந்திய திருடனை துணியால் அடித்து விரட்டியுள்ளார்.

நெதர்லாந்தில் உள்ள ரொட்டிக் கடை ஒன்றில் திருட முயற்சி செய்துள்ளான் ஒருவன். அப்போது கையில் கத்தியுடன் கடைக்குள்  நுழைந்த ஆடவரையோ கத்தியையோ கண்டு கடையின் பெண்  ஊழியர் பயப்படவில்லை.

கடையைச் சுத்தம் செய்துகொண்டிருந்ததால் கையில் ஒரு துணியை மட்டுமே அந்தப் பெண் அப்போது வைத்திருந்தார்.

இருப்பினும் அந்தப் பெண் விடவில்லை. சரமாரியாக அவனைத் துணியால் தாக்கியுள்ளார். முகமூடி அணிந்திருந்த அந்த திருடனின் முகமூடி நீக்கிய உடனே திருடன் தப்பி ஓடிவிட்டான்.

கடைக்கு வந்த ஒரு ஆடவரும் கத்தியைக் கண்டு மிரளாமல் அவனைப் பிடிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அதையும் தாண்டி அவன்  ஓட்டம் பிடித்துவிட்டான்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4