அனைத்து பிரச்சனைகளுக்கும் IMF தீர்வல்ல...! உதவிய பல நாடுகள் அழிந்தன...:நிவார்ட் கப்ரால்

Prathees
2 years ago
அனைத்து பிரச்சனைகளுக்கும் IMF தீர்வல்ல...! உதவிய பல நாடுகள் அழிந்தன...:நிவார்ட் கப்ரால்

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உதவியை நாடுவதன் மூலம் எமது நாட்டினதும் அதிலிருந்து உதவி பெற்ற பல நாடுகளினதும் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என நம்புவது மாயை என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் சுப்ரீம் கோர்ட்டில் சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்தார்.

அந்த நிதியிலிருந்து ஆதரவைப் பெற, வரிகளை அதிகரிக்கவும், மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணம் மற்றும் நலன்புரி நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் பணத்தை குறைத்து கிட்டத்தட்ட முற்றிலுமாக நிறுத்துதல், ஓய்வூதியத்தை வெட்டுவது போன்ற நாட்டின் ஆதரவற்ற மக்களை ஒடுக்கும் பல பாதகமான நிலைமைகளுக்கு அரசாங்கம் இணங்க வேண்டியிருக்கும் எனபிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய அமர்வுக்கு மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் தனது வாக்குமூலத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டைப் பொருளாதாரப் படுபாதாளத்தில் தள்ளுவதற்குக் காரணமான முடிவுகளை எடுத்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி சட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சந்திர ஜயரத்ன உள்ளிட்டோரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள், பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேகா அலுவிஹாரே, விஜித் கே. மலல்கொட, எல். டி. பி. தெஹிதெனிய மற்றும் முர்து பெர்னாண்டோ ஆகிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இதனை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனவரி 18, 2022 அன்று, சைவரி பத்திரக் கடனுக்காக இலங்கை மத்திய வங்கி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியதாக அவர் தனது வாக்குமூலத்தில் கூறுகிறார்.

பொதுக் கடனை செலுத்தும் பொறுப்பு அரசாங்கத்திற்கேயன்றி அரசாங்கத்தின் முகவராகச் செயற்படும் இலங்கை மத்திய வங்கிக்கு அல்ல என்றும் அவர் மேலும் கூறுகின்றார், இது முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் உரையின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.