விமான எரிபொருளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

Mayoorikka
2 years ago
விமான எரிபொருளுக்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்து

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் விமான எரிபொருளுக்கான ஒரு வருட கால ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 12 ஆம் திகதிக்கும் 14 ஆம் திகதிக்கும் இடையில் முதலாவது எரிபொருள் கையிருப்பு பெறப்படும் என அமைச்சர் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெட்ரோல் கப்பலுக்கும் டீசல் கப்பலுக்கும் தேவையான பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை வந்தடைந்த டீசல் கப்பலுக்கான கட்டணத்தை செலுத்தியதன் பின்னர் டீசலை இறக்கும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!