மெக்ஸிகோவில் 242.7 அடி நீள பிரம்மாண்ட சாண்ட்விச்- உலக சாதனைகள் படைத்த சமையல் கலைஞர்கள்

#Mexico
Prasu
2 years ago
மெக்ஸிகோவில் 242.7 அடி நீள பிரம்மாண்ட சாண்ட்விச்- உலக சாதனைகள் படைத்த சமையல் கலைஞர்கள்

மெக்சிகோவில் உலகின் மிக நீளமான சாண்ட்விச் தயாரிக்கப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. வெனுஸ்டியானோ கரான்சா நகரில் 17வது ஆண்டு டோர்டா கண்காட்சியின்போது டோர்டா சாண்ட்விச் என்ற உணவு வகை, 242.7 அடி நீளத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் அந்த சாண்ட்விச்சை 2 நிமிடங்கள் 9 வினாடிகளில் அடுக்கி, நேரத்திலும் சாதனை படைத்துள்ளனர் சமையல் கலைஞர்கள். சுமார் 800 கிலோ எடையுள்ள இந்த நீளமான சாண்ட்விச்சை உருவாக்க, பல்வேறு சமையல்காரர்கள் இணைந்து பணியாற்றினர். 

இந்த கண்காட்சியானது, டோர்டா சமையல் கலைஞர்கள் தங்கள் வணிகங்களை மேம்படுத்துவதற்கான நியாயமான வாய்ப்பை வழங்குவதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரோசா வென்ச்சுரா போன்ற சமையல்காரர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தங்களின் கடல் உணவு டோர்டா உணவகத்தை மூட வேண்டியிருந்தது. 

இந்த கண்காட்சி அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என கூறுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!