98வது ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்த 5 இந்திய திரைப்படங்கள்

#TamilCinema #Oscar #Movie #list #2026
Prasu
12 hours ago
98வது ஆஸ்கார் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்த 5 இந்திய திரைப்படங்கள்

98வது ஆஸ்கார் விருதுவிழா மார்ச் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற உள்ளது. இந்நிலையில் விருதுகளுக்கான தகுதியுடைய 201 திரைப்படங்களின் பட்டியலை அகாடமி வெளியிட்டுள்ளது.

அதன்படி சிறந்த திரைப்படப் பிரிவில் ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா: அத்தியாயம் 1', அனுபம் கெர் இயக்கிய 'தன்வி தி கிரேட்' ஆகிய படங்கள் இப்போட்டியில் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. 

தமிழில் இருந்து சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி சிறந்த திரைப்படப் பிரிவுக்கான தகுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளது.

நீரஜ் கய்வான் இயக்கிய 'ஹோம் பவுண்ட்' திரைப்படம் இந்தியாவின் அதிகாரப்பூர்வப் பதிவாக அனுப்பப்பட்டு, தற்போது 15 படங்களைக் கொண்ட சுருக்கப்பட்ட பட்டியலில் இடம் பிடித்துள்ளது. 

"மகாவதார் நரசிம்மா" படம் சிறந்த அனிமேஷன் திரைப்படப் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ராதிகா ஆப்தே நடித்த சிஸ்டர் மிட்நைட் படம், சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பொதுப் பிரிவுகளில் போட்டியிடத் தகுதி பெற்றுள்ளது. தொடர்ந்து இறுதிப் பரிந்துரைப் பட்டியல் ஜனவரி 22 அன்று வெளியாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!