தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்த சீனா

#China
Prasu
2 years ago
தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்த சீனா

2-ம் உலகப்போருக்கு பிறகு சீனாவிடம் இருந்து பிரிந்து சென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறி வருகிறது. ஆனால் சீனாவோ, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என கூறி சொந்தம் கொண்டாடி வருகிறது. 

இந்த சூழலில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு செல்ல இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அறிவித்தது. 

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா, நான்சி பெலோசி தைவான் சென்றால் அமெரிக்கா அதற்கான விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என பகிரங்கமாக எச்சரித்தது. 

ஆனால் சீனாவில் எதிர்ப்பயைும், மிரட்டலையும் புறந்தள்ளிவிட்டு நான்சி பெலோசி நேற்று முன்தினம் தைவான் சென்றார். 

கடும் பதற்றத்துக்கு மத்தியில் நான்சி பெலோசியின் விமானம் தைவான் தலைநகர் தைபேயில் தரையிறங்கியது. அங்கு அவருக்கு தைவான் அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர். 

அதை தொடர்ந்து அவர் தைவான் அதிபர் சாய் இங் வென் மற்றும் உயர்மட்ட அரசு அதிகாரிகளை சந்தித்து பேசினார்.