சீனா போர் பயிற்சி - தைவானில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என அச்சம்

#China #Thaiwan
Prasu
2 years ago
சீனா போர் பயிற்சி - தைவானில் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என அச்சம்

தென் கிழக்கு நாடான தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. ஆனால் தைவான் தனி நாடாக இயங்குவதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து உள்ளது. தைவானுக்கு வேறு நாட்டு தலைவர்கள் செல்ல கூடாது என சீனா எச்சரிக்கை விடுத்து இருந்தது. 

ஆனால் இந்த எதிர்ப்பை மீறி அமெரிக்க பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். 25 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்க சபாநாயகர் தைவான் சென்றது இதுவே முதல் முறையாகும். 

இது சீனாவுக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து தைவானை சுற்றியுள்ள கடல் பகுதியில் சீனா தனது ராணுவ வீரர்களை குவித்தது. தைவான் மீது பொருளாதார தடையையும் சீனா விதித்தது. 

தைவானை கப்பல்கள், விமானங்கள், ராணுவ டாங்கிகள் உள்ளிட்ட முப்படையினர் 6 முனைகளில் சுற்றி வளைத்து உள்ளனர். 

அவர்கள் போர் பயிற்சியை மேற்கொண்டனர். கண்டம்விட்டு கண்டம் பாயக்கூடிய 11 பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி சீனா சோதனை நடத்தியதாக தைவான் பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

மேலும் குண்டுகளை வீசியும் , பீரங்கி தாக்குதல் நடத்தியும் சோதனையை மேற்கொண்டது. வருகிற 7-ந்தேதி வரை இந்த போர் பயிற்சி நடைபெறும் என சீனா தெரிவித்து உள்ளது.