ஆஸ்திரேலியாவில் துணிகரம் - கால்நடை பண்ணையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் மரணம்
#Australia
#GunShoot
#Death
Prasu
2 years ago
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணம் போகியில் உள்ள கால்நடைகள் பண்ணை மீது நேற்று காலை மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலில் 3 பேர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியாகினர். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்தார். தகவலறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று குண்டு பாய்ந்து காயமடைந்தவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் தேடிவருகின்றனர். விசாரணையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
உலகிலேயே கடுமையான துப்பாக்கிச் சட்டங்கள் இருந்தும் இந்தத் தாக்குதல் நடந்திருப்பது ஆஸ்திரேலியாவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.